வீதி மருங்கில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய பெண் சிசுவொன்றை மீட்டெடுத்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த கைக் குழந்தையைத் தாம் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 20.01.2019 இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இக்குழந்தை வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருந்த இக்குழந்தை அழகாக ஆடை உடுத்தப்பட்ட நிலையிலேயே தெரு மருங்கில் கிடத்தப்பட்டிருந்ததாகவும் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் பெற்றோரைக்; கண்டு பிடித்துத் துப்புத் துலக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.