Breaking

Post Top Ad

Monday, January 7, 2019

மட்டக்களப்பு மாநகரசபை அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா.

(கல்லடி நிருபர்)

மட்டக்களப்பு மாநகரசபை தன் மக்கள் நலன்சார்ந்த சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கற்றுக் கொள்வதற்கு வசதியாக  அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை  உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை 07.01.2019 அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்;ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மாநகர சபைக்கு வந்துள்ளோம்.

மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே எங்களுக்கு அவர்கள் வாக்களித்து இம்மாநகர சபைக்கு எங்களை அனுப்பி வைத்தார்கள்.

அதுவல்லாமல்,  வெறுமனே சபையில் அமர்ந்து விட்டு வழங்கப்படும் கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செல்வதர்க்காக அல்ல.

மட்டக்களப்பு மாநகரசபையினால் ஒரு வருடத்திற்காக உருவாக்கப்பட்ட நிலையியற் குழுக்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கான தீர்மானம் 2019ம் ஆண்டிற்கான முதலாவது அமர்வில் முதல்வரினால் முன்மொழிவு செய்யப்பட்டு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது.

மாநகர சபையில் அமைக்கப்படும் நிலையிற்குளுக்கள் என்பது சாதாரன ஒன்றல்ல அமைக்கப்படும் குழுக்களின் செயற்பாடுகள் ஒருவருடத்திற்குட்பட்டது என கூறப்பட்டதற்கு இணங்க அவை மாற்றியமைக்கப்பட வேண்டும்.



அப்போதுதான் அக்குழுக்களின் செயற்பாடுகள் வினைதிறன் மிக்கதாக இருக்கும்.

தொடர்ந்து ஒரே சாரார் ஒரு குழுவில் இருப்பதனால் ஏனையவர்கள் மாநகர சபையின் வேலைகளை கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்.

உள்ளுராட்சி சபை என்பது அரசியலின் அத்திவாரம் இங்கிகிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விடயத்தைக்கொண்டுதான்  நாம் மக்களுக்கு சரியான வகையில் சேவையாற்ற முடியும். தொடர்ந்து ஒரே தரப்பினர் அதே பதவியில் குழுக்களில் அங்கம் வகிப்பதனால் ஊழல்; இடம்பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே குழுக்களை மாற்றியமைப்பதன் மூலம் அனைவரும் மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் என்னென்ன உள்ளன என்பதையும் அதன்மூலம் மக்களுக்கு எவ்வகையிலான சேவைகளை ஆற்ற முடியும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும்.

தொடர்ந்து ஒரே தரப்பினரை அதே பதவியில் வைத்திருப்பதனால் பல தவறுகளை ஏற்படுத்த நாமே வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததாகிவிடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Pages