விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் ,கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் வை சி .சஜீவன் , சிறப்பு விருந்தினர்களாக | மன்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே அருள்பிரகாசம் , அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்,இதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகளுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது,
விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கி வைக்கப்பட்டன
இன்று நடைபெற்ற புனித தெரேசா பெண்கள் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மரிய அசுந்தா இல்லம் 335 புள்ளிகளை பெற்று முதல் இடத்தினையும் , மரிய கொரட்டி இல்லம் 308 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்ட இல்லங்களுக்கு வெற்றி கிண்ணங்களும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.