
அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள சவுக்கடி கடற்கரையில் தைப்பொங்கல் கலாசார விழா இன்று 19ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாமணி கதிரவேல் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் செயல் கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இவ் விழாவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்று அதனையடுத்து கடற்கரையில் பட்டம் விடும் போட்டி, சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், கண்கட்டி முட்டி உடைத்தல், தேங்காய் துருவுதல், கிடுகு இளைத்தல் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல விளையாட்டுக்ள் இடம்பெற்து.
இப் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பசுசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.