Breaking

Post Top Ad

Thursday, January 24, 2019

தமிழர்களுக்குள் பிளவு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும்


தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளில் தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய முடியாத நிலையேற்படும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.


மட்டக்களப்பு  நாவற்காட்டில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வென்றில் லந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 இங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,

இளைஞர்கள் எமது சமூகத்தினை பொறுப்பேற்கும் காலம்வருகின்றபோதுதான் எமது சமூகம் முன்னேறும்.

தமிழ் சமூகம் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளான சமூகம்.இன்று சமூக ஒற்றுமையின்மை காரணமாக,எங்களுக்குள் இருக்கும் பிளவுகள் காரணமாக, எங்களுக்குள் இருக்கும் குறுகிய நோக்கங்கள் காரணமாக பிளவுபட்டு சின்னாபின்னமாகி மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் நிலையுள்ளபோது இந்த இளைஞர்கள் இங்கு ஒன்றாக கூடியிருப்பது பாராட்டக்கூடியதாகும்.

ஒரு சமூகம் வாழவேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், அரசியல், கலை, கலாசர,பண்பாட்டு விழுமியங்கள்,வாழ்வியல் முறைகள்,அந்த இனத்தின் மொழி, அதன்வாழ்விடம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும்.. எனவும் தெரிவித்தார்





No comments:

Post a Comment

Pages