தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமான விடையங்கள் எதுவும் இல்லை. உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையிலேயே அதனைப் பெற்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் செய்து கொண்ட கூட்டு எவ்வாறு உள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விற்கு பதில் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒரு உடன்படிக்கை ஒன்றை நாங்கள் செய்திருந்தோம். அதன் அடிப்படையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட்டிருந்தோம்.
அவர்களுடைய உதயசூரியன் சின்னம் தேவைப்பட்டதன் அடிப்படையில் நாம் அதனைப் பெற்றிருந்தோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிந்ததிற்கு பிற்பாடு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் உத்தியோகபூர்வமான விடயங்கள் எதுவும் இல்லை. ஆகவே எதிர்காலத்தில் நாங்கள் அதாவது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இப்போது இருக்கின்ற அடிப்படையிலான உறவுகள் தொடரும் என்ற விடயங்களும் இல்லை.
ஆகவே எதிர்காலத்தில் நிலமைகள் எப்படி இருக்கப் போகின்றது என்பதை பொறுத்து பின்னர் நாங்கள் முடிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.