ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் இரவு வேளையில் தடாலடியாக உட்புகுந்த இரு பெண்கள் அங்கிருந்த பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும், வீட்டின் ஜன்னல் மற்றும் பொருட்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் பற்றி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 22.01.2019 றிபாய் பள்ளியை அண்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் அவ்வீட்டிலிருந்த சுமார் 4 வயதுக் குழந்தை, அக்குழந்தையின் தாய் மற்றும் வீட்டிலிருந்த வீட்டின் கண்ணாடிகள், ஜன்னல்கள், சில பொருட்கள் என்பன தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த குழந்தையும் தாயும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூரின் மறுமுனையான கிராம நீதிமன்ற வீதியை அண்டி வசிக்கும் தாயும் மகளுமான இரு பெண்களே வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே இத்தாக்குதலின் அடிப்படையாக அமைந்திருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.