Breaking

Post Top Ad

Saturday, January 5, 2019

கடற்கரையில் புலிக் கொடி அதிர்சியில் இராணுவம்!!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது முல்லைத்தீவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் அதனை மீட்டுச் சென்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


இதேவேளை இதுதொடர்பான விசாரணைகளில் தாம் ஈடுபடுள்ளதாக கூறும் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் யாரையும் இன்னும் கைதுசெய்யவில்லை என்று கூறுகின்றனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages