மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 29 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் கைலாசநாதன் ஒழுங்கமைப்பில் அதிபர் எ .விஜேகுமார் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு விசேட நிகழ்வு நடைபெற்றது .
நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பாக தெளிவு படுத்தலும் , .அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதனால், நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்வில் பொதுசுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கொக்குவில் வட்டார மாநகர சபை உறுப்பினர் , ஊடகவியலாளர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment