Breaking

Post Top Ad

Wednesday, January 2, 2019

வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவி கலைப் பிரிவில் முதல் இடம்

வெளியாகியுள்ள 2018  ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் அனைத்து  மாவட்டத்திலும்  பாடசாலை மட்டத்தில் அதிகமான மாணவர்கள் உயர்தர பரீட்சையில்  சித்தியடைந்து  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 2018  ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய  மாணவர்களில் அதிகமான மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு அனைத்து துறைகளுக்கு தெரிவாகியுள்ளனர்

இதில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவி டிவ்யாணி சுதாகரன் ஏனைய துறையில் கலைப்  பிரிவில் பரீட்சைக்கு தோற்றிவித்து மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்   

மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட இந்த மாணவியை  பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம்  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்





No comments:

Post a Comment

Pages