.
மேலும், ஆரம்பப்பிரிவுக்கு மாத்திரம் சுமார் 68ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இதேவேளை கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் நிலவுகின்றது.
அதிகஸ்ட, கஸ்ட பாடசாலைகளைக்கொண்ட வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. இங்கு ஆரம்பப்பிரிவுக்கு சுமார் 65ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது இச் செயற்பாடானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்வியினை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரை அண்டிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளபோதிலும், கல்வியில் பின்தங்கியிருக்கின்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்காமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் எனமாணவர்களின் பொற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடானது இப்பகுதியின் கல்வியை சீரழிப்பதற்கான சதியா? என்ற சந்தேகம் தோன்றுவதாகவும் இப்பகுதி கல்வியலாளர்களும், சமுக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில், அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் கருத்தில்கொள்ளாமை கவலையளிக்கின்றது, இந்த செயற்பாடானது இப்பகுதியின் கல்வியை சீரழிப்பதற்கான சதியா? என்ற சந்தேகம் தோன்றுவதாகவும் சமுக ஆர்வலர்கள் மேலும் சமுக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.