Breaking

Post Top Ad

Friday, January 4, 2019

மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்விற்கு எதிர்ப்பு

மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று மாலை ஏற்பாடு செய்து இருந்தது.


இக்கலந்துரையாடலுக்கு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தவிசாளர் சி.கோணலிங்கம், சபை உறுப்பினர்கள், கதிரவெளி, புச்சாக்கேணி, புதூர், பால்சேனை, வம்மிவட்டவன் கிராமங்களின் சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


இக்கலந்துரையாடலில் மணல் அகழ்வினால் வரும் பாதிப்புகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், சமூகமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதில் தோட்ட செய்கை செய்வதாகவும், ஆரம்ப பாடசாலை அமைப்பது எனவும் காணி பொய்கூறி கொள்வனவு செய்யப்பட்டது எனவும் மற்றும் காணி விற்பனை செய்யாவிடின் அரசகாணி ஆகிவிடுவோம் என அச்சுறுத்தியும் காணிகள் கொள்வனவு செய்யபட்டதாகவும் மேலும் காணி கொள்வனவில் இலஞ்ச ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இவ்மண் அகழ்வினால் மக்கள் முற்றுமுழுதாக பதிப்படைவர் என்பதால் அனைத்து சமூகமட்ட அமைப்புகளும் இவ்நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.


மேலும் இதற்க்கு எதிர்ப்பு பேரணி நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து பிரதேசசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்நடவடிக்கை எமது பிரதேசத்தில் உள்ள ஒரு சிலரின் அனுமதியுடன் இதுநடைபெற்றிருப்பதாகவும் இதுமக்கள் வாழும் பிரதேசத்திற்கு பொருத்தமற்ற ஒன்று எனவும் மக்கள் ஆணையினை ஏற்று இதனை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க தயார் எனவும் தெரிவித்தனர்.


தொடர்ந்து தவிசாளர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் இருந்த அரச உத்தியோகத்தர்கள் விட்ட தவறின் காரணமாக மக்களினை தெளிவுபடுத்தாமல் மேற்கொண்ட நடவடிக்கை எனவும், கடந்த காலத்தில் எதிர்ப்புகள் மேற்கொண்ட போதும் கருத்தில் கொள்ளப்பட வில்லை எனவும், இதற்க்கு எமது மக்களே காரணம் எனவும் இதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாயின் குறித்த கம்பெனியினை மக்களினை தெளிவுபடுத்தி மக்கள் அனுமதி பெறும்படியும் கோரியுள்ளதாகவும் பிரதேச சபைஆண்டுக்கான வியாபார மற்றும் வீதி அனுமதியினை வழங்கவில்லை எனவும் இவ்நடவடிக்கை தொடர்பில் சபை அமர்வுகளில ;தடை செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளதாகவும் இதுதொடர்பில் மக்கள் கோரிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்க தயார் எனவும் தெரிவித்தார்


தொடர்ந்து பிரதேச வளங்களை பாதுகாப்பதற்கான அமைப்பு ஒன்று தேவை என கோரப்பட்டதற்கிணங்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதுடன், தொடர்ந்து எதிர்ப்பு பேரணி நடத்தவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages