Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

பொத்துவில் மத்திய கல்லூரியை தேசியக் கல்லூரியாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் பணிப்பு

பிரதேச மக்களின் நீண்ட காலக் வேண்டுகோளை கருத்திற் கொண்டு பொத்துவில் மத்திய கல்லூரியை, தேசியக் கல்லூரியாக தரமுயர்த்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு தமது மாகாணக் கட்டமைப்புக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மத்திய கல்விமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம். அஸங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மத்திய கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொத்துவில் மத்திய கல்லூரியை தேசிய கல்லூiரியாகத் தரமுயர்த்துமாறு மாகாணக் கட்டமைப்புக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாகாணக் கல்விப் பணிப்பாளர், தொடர்பான அதிகார மட்டம், மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அங்கீகரித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages