Breaking

Post Top Ad

Thursday, January 24, 2019

ஹர்த்தால் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் - தமிழ் உணர்வாளர் அமைப்பினர் தெரிவிப்பு


ஜனாதிபதி 25ம் திகதி  எமது போராட்டத்தை கவனத்தில் எடுக்காவிட்டால் எங்கள் போராட்டம் வீதிக்கு இறங்கும்  தமிழ் உணர்வாளர் அமைப்பினர்  தெரிவித்துள்ளனர்.

 இக் ஹர்த்தால் திட்டமிட்டபடி நாளை வௌ்ளிக்கிழமை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - செங்கலடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி​லே அவர்கள் இதனை ​​தெரிவித்துள்ளனர்.

 கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள  ஹிஸ்புல்லாஹ் அவர்களை தமிழ் மக்கள் ஆளுநராக ஏற்க மறுத்து ஜனவரி 25ந் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வீட்டுக்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோடச் செய்யும் போராட்டத்தினை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.


ஜனவரி 25 போராட்டமானது ஒரு இனத்துக்கு எதிரானதே அல்லது மதத்துக்கு அல்ல தனிப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஏற்க மறுப்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கமாகும்.

நாங்கள் இன மற்றும் மத அடிப்படையில் போராட்டம் நடத்துபவர்களாக இருந்திருந்தால் கடந்த கிழக்கு மாகாணசபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகபடியான ஆசனங்களை வைத்திருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அகமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்பு தெரிவித்திருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்பது பல்லின மக்களைக் கொண்ட பகுதியாகும் இதிலே தமிழரோ  முஸ்லிமோ அல்லது சிங்களவரோ அளுநராக வரமுடியும் யார் வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை. எமது பிரச்சினை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அளுநராக நியமிக்கப்பட்டதை மாத்திரமே நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்.   

இந்த கடையடைப்பு ஹர்த்தால் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் இதனை தமிழ் மக்கள் முன்னெடுத்துச் செல்லவுள்ளனர் எனவும் இவர்கள் இன்று காலை கருத்துத் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages