Breaking

Post Top Ad

Sunday, January 6, 2019

பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்ட திறப்பு விழாவில் சஜித் பிரேமதாச - படங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 148வது மாதிரிக் கிராமமான பழமுதிர்ச்சோலை வீடமைப்புத் திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது.


மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மானம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன்  வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இவ் வீட்டுத் திட்டமானது பயனாளிகளின் மூன்று இலட்சம் ரூபாய் பங்களிப்புடனும், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபாய் மானியம் நிதியளிப்பிலும் கொண்டதாக அமையப் பெற்றுள்ளது.


















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages