கிழக்கு மாகாணத்தில் மாரியம்மன் ஆரம்ப வழிபாட்டு தளமான மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (21) தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் ஆலயப்பிரதம குருக்கள் சிவஸ்ரீ சேக்கிழார் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன. இன்று காலை முத்துமாரியம் மனுக்கு விசேட அபிசேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம் பெற்றன.இதில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தைப்பூச நிகழ்வில் கலந்துகொண்டு அவ் நெற்கதிர்களை தங்களது வழிபாட்டறைகளில் வைத்து இவ் வருடம் முழுவதம் அன்னலக்ஸ்மி குறைவில்லாமல் கிடைக்க வேண்டி வழிபடுவார்கள்.இதேவேளை ஆலய நிர்வாகத்தினரால் இன்று இடம்பெற்ற சிறப்ப பூஜைகளின் பின் அருகிலுள்ள வயற்காணியில் புதிர் அறுவடை நிகழ்வு ஆலயக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.