சட்டவிரோதமாக பெரும் எண்ணிக்கையிலான மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றை மட்டக்களப்பு - புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் திங்கட்கிழமை (21) கைப்பற்றியுள்ளனர்.
வாகனத்தின் சாரதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதன்பின்னர் பிணை மனு நீமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து வாகனமும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகாஓயா பகுதியிலிருந்து செங்கலடியை நோக்கிய பிரதான வீதியில் சிறிய ரக லொறியொன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவேளை அந்த லொறி இலுப்படிச்சேனைப் பிரதேசத்தில் வன அதிகாரிகள் சோதனையிட்டபோது மரக்குற்றிகளை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த லொறியில் சுமார் 5 அடிநீளமுடைய 23 தேக்கு மற்றும் முதிரை மரக்குற்றிகள் காணப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 27 ஆந்நிதிகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்தேக நபருக்கு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
வட்டார வன அதிகாரி என் நடேசன், பகுதி வன உத்தியோகத்தர் எச்கேகே. ஹப்புஹின்ன மற்றும் எம்ஜேஎம். முஹ்ஸி ஆகியோரடங்கிய குழுவினர் இம்மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.