கலை,கலாசார குழுத்தலைவரும் ,மாநகர உறுப்பினருமான வி .தவராஜா தலைமையில் நடைபெற்ற பௌர்ணமிக் கலை விழா நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,மாநகர ஆணையார் கே .சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்
மங்கள விளக்கேற்றப்பட்டு , மாணவி அக்சயாவினால் மாநகர கீதம் பாடப்பட்டு ஆரம்பமான பௌர்ணமிக் கலை விழாவில் வரவேற்பு உரையினை கலை ,கலாசார குழு செயலாளரும் , மாநகர உறுப்பினருமான எம் .சண்முகலிங்கம் நிகழ்த்த தலைமை உரையினை கலை,கலாசார குழுத்தலைவரும் ,மாநகர உறுப்பினருமான வி .தவராஜா வாங்கினார்
இதனை தொடர்ந்து தீந்தமிழ் எனும் சிறப்புரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை அ . நவரட்ணம் வழங்கினார்மாதாந்தம் நடைபெறும் பௌர்ணமிக் கலை விழா நிகழ்வின் ஏழாவது நிகழ்வானது நேற்று மாலை நடைபெற்றது .
நிகழ்வில் மட்டக்களப்பை பிரதிநிதித்துவ படுத்தும் கலைஞர்களின் நர்த்தன நாட்டியம் ,நாடகம் ,கூத்து போன்ற கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலான் , பிரதி ஆணையாளர் , என் .தனஞ்சயன் ,மாநகர சபை உறுப்பினர்கள் , மாணவர்கள் , பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.