Breaking

Post Top Ad

Thursday, January 24, 2019

நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்;திற்கான உதவியும் சுத்தமான குடிநீர் பெறும் வசதியும் வழங்கி வைப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


குவைத் நாட்டைச் சேர்ந்த அல்-நஜாத் அறக்கொடை அமைப்பினால்  நலிவுற்ற குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகளும் சுத்தமான பொது குடி நீர் வழங்கலும் வியாழக்கிழமை 24.01.2019 மட்டக்களப்பின் பல்வேறு தெரிவு செய்யப்பட்ட இடங்களில்  இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சூடுபத்தாதசேனை கிராமத்தில் 9 குடும்பங்களுக்கு தலா 15000 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கோழிகளும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களுக்கு தலா 35000 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக சிறுகடைக்குரிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு மண்முனை வடக்கு மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் ஒரு இலட்ச ரூபாய் செலவில் 1000 லீற்றர் கொள்ளவுள்ள 46 தண்ணீர்த் தாங்கிகளும், மேலும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 1500 லீற்றர் கொள்ளளவுள்ள பொதுப் பயன்பாட்டு தண்ணீர்த் தாங்கிகளும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம்,  அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் முஹம்மத் அலியார், அந்நிறுவன சமூக சேவையாளர்களான எம்.எல்.எம். அப்துல் றஹ்மான்,  ஏ.எம். சலீம் ஆகியோரும் பயனாளிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை குவைத் நாட்டு அல்-நஜாத் அறக்கொடை அமைப்பின் நிதியுதவியுடன் இலங்கை அந்-நூர் அறக்கொடை ஸ்தாபனம் இலங்கையின் பல பாகங்களிலும் அனைத்து சமூக மக்களுக்குமான வாழ்வாதார உதவிகள், இடர் உலருணவு நிவாரணங்கள், பாதையமைப்பு. அனாதைகளைப் பராமரித்தல், மின்சார விநியோகத்திற்கு உதவி, குடி நீருக்கான இணைப்பைப் பெற உதவி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அதன் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். 










No comments:

Post a Comment

Pages