Breaking

Post Top Ad

Tuesday, January 8, 2019

மாவட்ட பொங்கல் விழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல்

 (எஸ்.நவா)

மாவட்ட பொங்கல் விழா தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் (07)திங்கள்கிழமை பிரதேச செயலககேட்போர் கூடத்தில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இவ்மாவட்ட பொங்கல் விழாவானது போரதீவுப்பற்று பிரதேசசெலயகத்தின் பலாச்சோலை கருணைமலை சித்தி வினாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் இப்பிரதேசத்தை பிரதினுவப்படுத்தும் கலை கலாச்சாரபாரம்பரியங்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்டத்தினுடைய திணைக்களகிளை அதிகாரிகள் பிரதேசதிணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.










No comments:

Post a Comment

Pages