“அம்கோர்” தன்னார்வத் தொண்டு நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இனைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களில் அதிகளவில் வெள்ளநீரினால் பாதிப்புக்குள்ளான மக்களில் தெரிவு செய்யப்பட 50000 பயனாளிகளுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன
இதன்கீழ் மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவக்குடா , மாமாங்கம் , அமிர்தகழி ,புன்னச்சோலை ஆகிய கிராம சேவை பிரிவுகளில் வெள்ளநீரினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளான மக்களின் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு நுளம்பு வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் “அம்கோர்” தன்னார்வத் தொண்டு நிறுவன உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.