Breaking

Post Top Ad

Saturday, January 12, 2019

ஏறாவூர் - புன்னக்குடா கடலில் நீரி;ல் மூழ்கிய சிறுவனின் சடலம் கரையொதுங்கியது


ஏறாவூர் - புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை நீரி;ல் மூழ்கி பலியான சிறுவனின் சடலம்         வெள்ளிக்கிழமை புன்னக்குடா பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி- மத்திய கல்லூரியில் தரம் 8 வகுப்பு மாணவரான செங்கலடி குமார வேலியார் கிராமத்தைச்சேர்ந்த              13 வயதுடைய குவேந்திரன் கரிஸ்வர்த்தன் என்ற சிறுவனே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.

இவர் வியாழக்கிழமையன்று தனது வகுப்புத் தோழர்கள் ஆறுபேருடன் கடலில் நீராடிக்கொண்டிருந்தவேளை  அலையில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். 

 மீனவர்களது உதவியுடன் தேடியபோதிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

24 மணிநேரத்தின் பின்னர் சடலம் கரையொதுங்கியது.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்ஸ்எம் நஸீர்         சம்பவ இடத்திற்குச் சென்று மரணவிசாரணைகளை ஆரம்பித்தார்.

ஏறாவூர்ப் பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages