Breaking

Post Top Ad

Tuesday, January 1, 2019

இரண்டு வருடங்களாக நடாத்தப்படாதுள்ளமை குறித்து எதுவும் பேசாது ததே கூ மௌனம்


கிழக்கு மாகாண சபை கடந்தகாலத்தில் நான்கு வருடங்களில் கலைக்கப்பட்டபோது போர்க்கொடிதூக்கிய தம்pழ்த் தேசியக் கூடட்டமைப்பு தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இரண்டு வருடங்களாக நடாத்தப்படாதுள்ளமை குறித்து எதுவும் பேசாது  மௌனம் காப்பது அதன் கபடத்தனத்தைக்காட்டுவதாக  மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இன,மத ,பிரதேச வெறுபாடின்றி  பணியாற்றிவருகின்ற தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநரை இடமாற்றக்கூடாது என்ற கோரிக்கையினை தான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.



தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'அடிப்படை வசதிகளற்றோருக்கு வாய்ப்புக்களை வழங்கும்" விசேட திட்டத்தின்கீழ் செவ்வாய்கிழமை (01) ஏறாவூரில் மலசல கூடம் இல்லாத 25 பேருக்கு முதற்கட்டமாக கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்துக்களைக் குறிப்பிட்டார்.


 ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் வீ. யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  வீடமைப்பு பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். அர்சாத் உள்ளிட்ட பிரமுகர்கள் பிரசன்னமாயிருந்தனர்.


அவர் இங்கு தொடர்ந்துபேசுகையில்--5 வருடகால ஆயுளைக்கொண்ட கிழக்கு மாகாண சபை கடந்தகாலத்தில் நான்கு வருடங்களில் கலைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது ஜனநாயக விரோத செயல் எனக்கூறியதுடன் உடனடியாக தேர்தல் நடாத்தப்படவேண்டுமென போர்க்கொடிதூக்கியது. அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.  சுமந்திரன்  வழக்கொன்றையும் தாக்கல்செய்தார்.


ஆனால்  கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களாகின்றன. ஜனநாயகம் பற்றிப்பேசுகின்ற  சிறுபான்மை அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையினை இது வரை ஆணித்தரமாக முன்வைக்கவில்லை. எனவே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடாத்தப்பட்டு ஆட்சி அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.


அதேவேளை, தற்போதைய மாகாண ஆளுநர் றோகித்த போகொல்லாகம சிறப்பான சேலையாற்றிவருகின்hர். கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட மக்கள் இவரால் பெரிதும் பயடைகின்றனர். இன,மத, பிரதேச வேறுபாடுகள் இவரிடம் கிடையாது. மக்களது தேவை அறிந்து சேவையாற்றுகின்ற தற்போதைய ஆளுநரை மாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன் என்றார்..



No comments:

Post a Comment

Pages