Breaking

Post Top Ad

Sunday, January 6, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்தகங்களின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கமும் இணைந்து நடாத்திய,, தற்காலத்தில் மருந்தகங்களின் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்  பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வீ.இரமநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கிறேஸி நவரெட்ணராஜா கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில், தொாற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி ஆர்.நவலோஜிதன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி எம்.அச்சுதன், பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி தர்ஷினி காந்தரூபன்,கிழக்கு பல்கலைக் கழக நுண்ணுயிரியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் வேதகி ரஜிவன்,  கிழக்கு பல்கலைக் கழக மருந்தியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ரொஷானி பிரகாஷ், சுகாதார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.வுஹார்டீன்,    பிராந்திய உணவு, மருந்துகள் பரிசோதகர்களான ரீ.வரதராஜன்,என்.விமலசேகரன்,என்.தவநேசன்,மருந்தக உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய தேசபந்து எம்.சுதாகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது தனியார் மருந்தகங்களின் சட்ட திட்டங்கள், பொறுப்புக்கள் மற்றும் நோயாளர்கள், வாடிக்கையாளர்களிடம் மருந்துப் பொருட்களை வழங்கும் போது மருத்துகள் மாத்திரைகளை பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மருந்தக உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்ட்டது.

இது தவிர மருந்தகங்களுக்கு குளிரூட்டி (AC ) பயன்படுத்துதலின் அவசியம், மருந்தகங்களை பராமரிக்கும் முறைகள் போன்றவைகள் பற்றியும் வைத்திய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது

மேலும் இதன் போது சிறந்த மருந்தக உரிமையாளர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்ட நிகழ்வும் இடம் பெற்றது.






















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages