Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலயத் திருவிழாவில் ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்வுகள்

(சிவம்)    

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கோடு இந்து மதத்தில் புலமை மிகுந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலய இரண்டாம் நாள் திருவிழாவான இன்று (13) நடைபெற்றது.


இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்; இரவுத் திருவிழாக்களில் சிவயோகச்செல்வன் எஸ். சாம்பசிவம் சிவாச்சாரியாரினால் தினந்தோறும் நடைபெற்றுவரும் ஆன்மீகச் சொற்பொழிவில் இருந்தும் ஆலய அறங்காவல் சபையினரால் கேழ்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்பவர்களுக்கே பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலயத் தலைவர் எஸ். அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர் கே.கே. சண்முகம் குடும்பத்தினர் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் திருவிழாக் காலங்களில் இத்தகைய ஊக்குவிப்புப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages