Breaking

Post Top Ad

Monday, January 28, 2019

அஹிம்சா சமூக நிறுவனத்தினால் கஸ்டப் பிரதேச பாடசாலைக்கு கணனி வழங்கிவைப்பு.

அஹிம்சா சமூக நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்டப் பிரதேசத்திலுள்ள மாவளையாறு பாடசாலைக்கு கணனி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.



இக் கணனி அமெரிக்காவில் வசிக்கும் ஜெகன் அவர்களின் உதவியில் மேற்படி பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மேற்படி பாடசாலையின் குறைகளை இனங்கண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காககு கொண்டு, அப்பாடசாலையின் அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக அஹிம்சா சமூக நிறுவனத்தினால் இது பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் ராஜ்மோகனிடம் கையளிக்கப்பட்ட கணனியை நேற்றைதினம் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.









No comments:

Post a Comment

Pages