(கிரான் வெற்றி முசைு நிருபர் மோகிலன்)
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தினால் கோரகல்லி மடு பொதுமைதானத்தில் பாரம்பரிய முறையிலான பொங்கல் விழா இன்று 17ஆம் திகதி நடைபெற்றது
இந் நிகழ்வானது கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இப் பொங்கல் விழாவில் பாரம்பரிய முறைப்படி பொங்கலுக்கான பொருட்கள் எடுத்துவரப்பட்டு பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி பொங்கல் வழா கொண்டாடப்பட்டது.
இதன்போது கிரான் பிரதேசபிரிவிற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச அமைப்புக்கள் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தனர்.
மேலும் இவ் விழாவில் கிரான் தொப்பிகல இராணுவத்தினரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் கிராமிய பாடல்கள், நாட்டார் பாடல்கள் ,நடனம், மற்றும் கிராமிய விளையாட்டுக்கள் போன்றன இடம்பெற்றது.
நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. கோறளை தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு ,உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா,கிரான் தொப்பிகல சிவில் பிரிவு கட்டளை அதிகாரி கேணல்.என்.ஜெயக்கொடி,மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.