மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ந. கோபால் (வயது 42) என்பவருடைய சடலமே மகிழூர் பெரியகுளத்தில் இருந்து திங்கட்கிழமை 21.01.2019 மீட்கப்பட்டது.
கடந்த 17ஆம் திகதி வீட்டில் இருந்து இருந்து சென்றவர் திரும்பி வராததினால் உறவினர்கள் இவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தபோதே அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
இவர் முதலைக் கடிக்கு உள்ளாகி அதனால் உயிரிழந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.