Breaking

Post Top Ad

Friday, January 25, 2019

36 பேருக்கு கண்புரை (கட்டரக்ற்) இலவச சத்திரசிகிச்சை


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 36 முதியோருக்கு முற்றிலும் இலவசமாக கண்புரை (ஊயவயசயஉவ கட்டரெக்ற்) யை நீக்குவதற்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

இதன்படி வெள்ளிக்கிழமை 25.01.2019 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


இந்த கண்புரை இலவச சத்திர சிகிச்சைக்கு வாகரைப் பிரதேசத்திலிருந்து அநேகம்பேர் விரும்பியிருந்த போதிலும் வறுமை உட்பட பல்வேறு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முதற்கட்டமாக 55 வயதைக் கடந்த 36 பேர்   தெரிவு செய்யப்பட்டதாக குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார்.

வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி மற்றும் சமூக சேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் என். கணலோஜினி ஆகியோரின் முழுமுயற்சியின் பயனாக வாகரைப் பிரதேசத்திலுள்ள வறுமை நிலையிலுள்ள முதியோருக்கு கண்புரை நோய்க்கான  இலவச சத்திர சிகிச்சை பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages