Breaking

Post Top Ad

Tuesday, January 29, 2019

கல்லடி பாலத்திலிருந்து குதித்து காணாமல் போன இளைஞனின் சடலம் 2 நாட்களின் பின்னர் மீட்பு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த நிலையில் காணாமல்போன இளைஞனின் சடலம் திங்கட்கிழமை மாலை 28.01.2019 கல்லடிப் பாலத்தை அண்டியுள்ள வாவிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.


பாண்டிருப்பைச் சேர்ந்த நடேசரெத்தினம் தனுஸ் (வயது 25) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின்  உடற் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடிப் பாலத்திலிருந்து வாவியில் குதித்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

அவரால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் ஏற்கெனவே மீட்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனை, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் கூட்டாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments:

Post a Comment

Pages