Breaking

Post Top Ad

Tuesday, January 1, 2019

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 250 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தி!

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காக கம்பெரலிய வேலைத்திட்டத்தின் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கம்பெரலிய துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பெறப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கான திட்ட முன்மொழிவுகளன் அடிப்படையில் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


யுத்த சூழலின் போது அதிகமாக பதிப்புக்குள்ளாகிய வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 100 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாங்கேணி சென்றல் தேவாலய வீதி முதலாம் இரண்டாம் குறுக்கு வீதி, வாகரை வடக்கு மதுரங்கேணி வீதி, புச்சாக்கேணி கதிர்காமர் வீதி, தட்டுமுனை பாடசலை வீதி, பால்சேனை நாககன்னி வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது.


ஆலம்குளம் ஸ்ரீ முருகன் ஆலயம், வட்டுவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், காயாங்கேணி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், மாவடியோடை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயம், வாகரை ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், புச்சாக்கேணி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், அம்பந்தானவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், புளியங்கண்டலடி மாரியம்மன் ஆலயம், வாகரை மத்தி நாகதம்பிரான் ஆலயம், புனிச்சங்கேணி செந்தூர் முருகன் ஆலயம், பெரியதட்டுமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், குகனேசபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், ஆண்டாங்குளம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம், கண்டலடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், மாங்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், இறாலோடை சித்தி விநாயகர் ஆலயம் , ஒமடியாமடு விநாயகர் ஆலயம், மதுரங்கேணிகுளம் சித்தி விநாயகர் ஆலயம் , புணாணை புகையிரத சந்தி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்று புனரமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.



காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயம், மதுரங்கேணிகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கண்டலடி அருந்ததி வித்தியாலயம், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு மைதான புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages