Breaking

Post Top Ad

Wednesday, January 9, 2019

சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பானகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை வழக்கு தொடர்பாக  குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை புதன்கிழமை 09.01.2019ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.


இதன்போது, எதிரிகள் தரப்பில் ஜனபதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.   

இவ் வளக்கில் கைது செய்யப்பட்ட 1,2ம் எதிரிகள் வழங்கிய  குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக    சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டனர்.

கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Pages