Breaking

Post Top Ad

Sunday, January 6, 2019

சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் 2019ம் ஆண்டுக்கான முதலாவது வருடாந்த ஒன்று கூடல்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் 2019ம் ஆண்டுக்கான முதலாவது வருடாந்த இரவு ஒன்று கூடல் நிகழ்வு நேற்று 05 சனிக்கிழமை இரவு காத்தான்குடி கடற்கரையிலுள்ள றஹ்மதுல்லாஹ் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி ஒன்று கூடலில் அதன் செயலாளர் ஏ.எல்.டீன் பைறூஸ்,அதன் பொருளாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட அமைப்பின் உப தலைவர்,உப செயலாளர் உட்பட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் ஒன்று கூடலில் சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களான இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் செயலமர்வுகளை நடாத்தல்,மக்களின் அடிப்படை பிரச்சினைகளை இனங்கண்டு அதனை ஊடகங்களில் அறிக்கையிடல்,நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்றை நடாத்தல் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்துடன்,போரத்தின் நலனை கருத்திற் கொண்டு சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages