Breaking

Post Top Ad

Tuesday, January 22, 2019

பகிடிவதையால் 14 மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதையில் ஈடுபட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் 14 சிரேஷ்ட மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொள்ளுபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக இணைந்த இரு மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் தாக்கிய குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது 14 மாணவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொள்ளுபிட்டிய நீதவான் ஜனனி எஸ்.விஜேதுங்க உத்தரவிட்டார்.

அத்தோடு, தாக்குதலுக்குள்ளான மாணர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages