Breaking

Post Top Ad

Sunday, January 13, 2019

13ஆவது திருத்தம் முற்றாக அமுல்படுத்தப்படாமை அரசியலமைப்புக்கு முரண்

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் தாம் அதனை முற்றாக நடைமுறைப்படுத்தப்போவதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்துள்ளார்.

 அந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது எந்த விதத்திலும் அரசியலமைப்பு மீறலாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே கலாநிதி ராகவன் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண மக்களின் அபிமானமாக இருப்பது கல்வி. ஆனால், போருக்குப் பின்னரான சீரழிவினால், தமிழ் மக்கள் இந்த நிலையில் இருந்து ஒன்பதாவது மாகாணம் என்ற நிலைக்கு மாறியிருக்கிறார்கள். இஃது ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இலங்கையருக்கும் கவலையளிக்கும் விடயம். எனவே, கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு ஓர் அதிரடிக் குழுவை அமைத்து எல்லாக் கட்சிகளும் எந்தவிதக் கட்சி சார்பும் இல்லாமல், ஒன்று சேர்ந்து பணியாற்றி இந்த நிலையை மாற்றுவதற்காகத் துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அடுத்ததாக விவசாயம். வட மாகாணம் என்பது 1980 வரையில் முழு இலங்கையிலும் 60% விவசாய உற்பத்தியைக் கொண்டதாக இருந்தது. எமது கலாசாரம் விவசாயக் கலாசாரம். விவசாயத்துடன் கலந்த ஒரு வாழ்வியலாக இருந்தது. அஃது இப்போது சீரழிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்படும்.

அதோடு சம்பந்தப்பட்டதுதான் நீர்ப்பாசனம். ஆகவே, வட மாகாணத்தில் உள்ள எல்லாக் குளங்களையும் புனரமைக்க, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாணத்திற்குக் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளையும் நடைமுறைப்படுத்துவதற்குத் துறை சார்ந்த அமைச்சுடன் இணைந்து செயலாற்றவிருக்கின்றோம்என்றும் கலாநிதி சுரேன் ராகவன் கூறியள்ளார்.

 வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழங்கிய முழுமையான நேர்காணலை இன்று(13) வெளியான தினகரன் வாரமஞ்சரியில் பார்வையிடமுடியும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages