Breaking

Post Top Ad

Tuesday, January 29, 2019

சுழற்சி முறையின் கீழ் நகர சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைப்; பிரதிநிதித்துவப்படுத்த புதிய உறுப்பினராக கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினரும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் திங்கட்கிழமை 28.01.2019 நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பிராந்திய ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கும், ஆலோசனைக்கும் அமைவாகவே இவர் தற்பொழுது நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு  காத்தான்குடி நகர சபையில் நான்கு உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகின்றது.

கடந்த தேர்தலைத் தொடர்ந்து  சுழற்சி முறையில் உறுப்பினர் நியமனம் என்ற பிராந்திய  உயர்மட்ட  சபையின் ஆலோசனைக்கு அமைவாக நகரசபை உறுப்பினராகப் பதவி வகித்த  எம்.பி.எம்.  பிர்தௌஸ் சமீபத்தில் இராஜினாமாச் செய்திருந்தார். அவரது இடத்திற்கே புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Pages