Breaking

Post Top Ad

Thursday, December 27, 2018

சிறீதரன் எம்.பியின் வேண்டுகோளுக்கிணங்க உதவ முன்வந்துள்ள அமைச்சர்கள் -


கிளிநொச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடம் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

சஜித் பிரேமதாச வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை புனரமைக்க தலா 2 இலட்சம் தருவதாகவும், ரஞ்சித் மத்தும பண்டார பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு தலா 10,000 ரூபாவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகில விராஜ் காரியவசம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்குவதாகவும், மனோ கணேசன் 5 மில்லியன் ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்களை வழங்குவதாகவும்,

திகாம்பரம் 2 மில்லியன் ரூபாய் செலவில் உலருணவு பொதிகள் வழங்குவதாகவும் சிறீதரனிடம் குறிப்பிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages