Breaking

Post Top Ad

Saturday, December 29, 2018

லிப்ட்டுக்குள் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு


கொழும்பு , கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியின் லிப்ட் உடைந்து விழுந்தத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம்,  இன்று (29) அதிகாலை 1.50 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பத்தரமுல்ல, தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான கோகில சமந்தபெரும என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில், மேலும் இருவர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Pages