Breaking

Post Top Ad

Wednesday, December 26, 2018

மாவட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு - மட்டக்களப்பில்




'மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாவட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு புதன்கிழமை 26.12.2018 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிகழ்வை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.



தேசியக் கொடியை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்து தேசிய கீதத்தை அடுத்து 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் உயிர்களை நீத்த அனைவருக்குமான ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004 டிசெம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும்.

இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், காணிக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர் காணி- நவரூபரஞ்சினி முகுந்தன்,  அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ். கோகுலராஜா, திணைக்களத் தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலர்களும்  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையமும் - அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் தேசிய பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளின் முக்கிய செயற்பாடாக தேசிய பாதுகாப்பு தினம் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages