
கடந்த ஆண்டு இதே நாளில் விராட் கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்து கொண்டது. அதன்படி இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இவர்கள் கொண்டாடுகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் விளையாடி வரும் விராட் கோஹ்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி அனுஷ்காவிற்கு வாழ்த்து
தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,
‘என்னால் இதை நம்ப முடியவில்லை, ஏனெனில் நேற்று நடந்தது போல் இதனை நான் உணர்கிறேன். நேரம் மெதுவாக பறந்துவிட்டது. என் இனிய தோழி மற்றும் காதலிக்கு இனிய முதலாமாண்டு திருமண வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், ‘நேரம் கடந்து செல்லவில்லை என்பதை நீங்கள் உணரும் போது, இது சொர்க்கம்... ஒரு சிறந்த மனிதரை நீங்கள் மணந்தால், இது சொர்க்கம்’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.