எமது மக்கள் தற்போதொரு மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளதுடன் இதனைத் தடுத்து நிறுத்தி முன்னிருந்த ஜனநாயக நிலைமையை ஜனாதிபதி உருவாக்க வேண்டும் நாட்டு மக்கள் தற்போது ஒரு அச்ச நிலையில்க காணப்படுவதாகவும் சிறுபான்மை மக்கள் கொண்டுவந்த ஜனாதிபதி இதற்கு நல்ல தீர்வை உடனடியாகக் காணவேண்டுமென்றும் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்க வேண்டுமெனவும்
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு மறை மாவட்ட அமைப்பினரால் இன்று மாலை மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகாமையில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் இன்றைய அரசியல் சூழலில் அமைதி இழந்த மக்களின் குரல் எனும் கவனயீர்ப்பு நிகழ்வு தலைமை தாங்கையிலேயே வடக்கு கிழக்கு மறைமாவட்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் செயலாளர் அருட்தந்தை சுஜித்த சிவநாயகம் இவ்வாறு கருத்தத் தெரிவித்தாh.;
இதில்; கலந்து கொண்ட மக்கள் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் தங்களின் தேவைகளுக்காக குரல் கொடுப்பதைத் தவிர்த்து பாராளமன்ற சம்பிரதாயங்களை மீறி மக்கள் மன்றத்தில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதைக் கண்டிக்கும் பதாதைகளை ஏந்தியவாறு தாம் தெரிவு செய்த ஜனாதிபதி இதற்கு உரிய தீர்வை காண்பதோடு மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிகள் வேண்டுகோள் விடுத்தனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.