
இச்சபையிலுள்ள 31 உறுப்பினர்களில் 26 பிரதிநிதிகள் வரவு- செலவுத்திட்டத்pற்கு ஆதரவாகவும் 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். 3 பேர் சபைஅமர்விற்கு சமுகமளிக்கவில்லை.
சபையின் அமர்வு தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகளை சபையின் அங்கீகாரத்துடன் செயலாளர் என். கிருஷ்ணபிள்ளை வாசித்தார்.
இதையடுத்து சில உறுப்பினர்களினால் திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டன. சபை அமர்வின்போது காரசாரமான வதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதையடுத்து சபை நடவடிக்கைகள் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழ் மக்;கள் விடுதலைப்புலிகள், இலங்கைத்தமிழரசக்கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய இயக்கம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செங்கலடி வட்டார உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வந்தாறுமூலை உறுப்பினர் புத்திசிகாமணி சசிதரன் ஆகியோர் மாத்திரமே வரவு- செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.