Breaking

Post Top Ad

Monday, December 10, 2018

பந்துவீச்சு பாணி முறையற்றது; அகிலவிற்கு பந்துவீச தடை


அகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி ஒழுங்கு விதிகளை மீறுவதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அகிலவின் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages