Breaking

Post Top Ad

Thursday, December 6, 2018

குற்றப் பிரேரணைக்கு ஆதரவில்லை!! ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு


ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர் டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.


இதனையடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கதில் இதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages