Breaking

Post Top Ad

Wednesday, December 26, 2018

சுனாமி பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுணதீவில் அஞ்சலி

சுனாமி பேரலையில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்கா   இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும் வணக்கம் செலுத்தும் நிகழ்வும் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று 26ஆம் திகதி காலை  நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வின் போது தேசியகொடி  ஏற்றப்பட்டு, ஆழிப் பேரலையில் மரணித்த உறவுகளுக்கு சாந்தி வேண்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், கணக்காளர் வே.வேல்ராஜசேகரம். உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் த.சத்தியசீலன், நிருவாக உத்தியோகத்தர்(கி.உ)  எம்.கோமளேஸ்வரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 













No comments:

Post a Comment

Pages