கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(09) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றது.
இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு இன்று ஏராளமான பொது மக்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் சிறுவர்களும் வருகை தந்திருந்தனர்.
இதன் போது சிலர் தங்களது பிள்ளைகளுடன் ஆபத்தான பகுதியான வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் பரப்பாக இருந்த போது மறுபுறம் சிறுமி ஒருத்தி நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இரணைமடு குளத்தை பார்வையிடுவதற்கு வருகை தருபவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனவும்,
ஆபத்தான பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் குழந்தைகளுடன் செல்ல வேண்டாம் என்றும், அத்தோடு சிறுவர்களை தனியே இரணைமடுவுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post Top Ad
Sunday, December 9, 2018
இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.