Breaking

Post Top Ad

Friday, December 14, 2018

மஹிந்தவுக்கான தீர்ப்புடன் விடைபெறுகிறார் நீதியரசர் ஈவா

உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, நேற்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் 502ஆவது அறையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹார மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில், மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை இடம்பெற்றது.

இந்த வழக்குக்காக, மேற்படி நீதியரசர்கள் குழாம் வந்து அமர்ந்ததை அடுத்து உரையாற்றத் தொடர்ங்கிய நீதியரசர் புவனெக்க அலுவிஹார, 40 வருடகாலச் சேவையை நேற்றுடன் பூர்த்தி செய்யும் நீதியரசர் ஈவா வனசுந்தர, ஓய்வுபெறப் போகிறாரென அறிவித்ததோடு, அவருக்கான வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages