Breaking

Post Top Ad

Thursday, December 13, 2018

நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட நடிகர் ரஜினிகாந், தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருப்பதால் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்துள்ளார்.



நேற்று 12 ம் திகதி இவர் தனது 68 - வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில், தான் அரசியலுக்கு வரபோவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். ஃபின்ஆப் தகவலை வெளியிட்டது.
நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன.
Range Rover, Bently மற்றும் Toyota Innova.
ரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ
2016 - ரூ .65 கோடி
2015 - ரூ . 58 கோடி
2014 - ரூ. 35 கோடி
2013 - ரூ. 60 கோடி
2012 - ரூ . 49 கோடி



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages