தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'சிலர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பாக நடுநிலை வகிக்குமாறு கூறுகின்ற போதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம்.
அரசியல் அமைப்பு மீறப்பட்டதாக சர்வதேசத்தில் இருககக் கூடிய அரசியல் நிபுனர்கள் மற்றும் உள்ளுரில் இருக்க கூடிய நிபுனர்கள் அரசியல் அமைப்பு மீறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்
ஆனால் நீதிமன்றம் எப்படி தீர்ப்பு வழங்கும் என தெரியாது இந்த நிலையில் ஒரு அதிகாரபூர்வமற்ற அல்லது சட்டவாக்கத்துக்குட்படாது தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் அந்த அரசாங்கத்திற்பட்டு தேர்தல் நடாத்தக் கூடாது என்பது ரணிலின் நிலைப்பாடு
மீண்டும் தேர்தல் நடைபெற்று அப்போது ஐக்கய.தேசிய .முன்னணிதான் அரசாங்கம் வருகின்றது அப்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக மறுத்தால் என்ன நடக்கும்.
தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்பிடவில்லை அதேவேளை இந்த மூன்றரை வருடத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை செய்யாவிட்டாலும் சிலவற்றை செய்திருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது அரசியல் அமைப்பு போய்கொண்டிருக்கின்றது அது இறுதி வரைவு வருகின்றபோது தான் அது சரியா பிழையா என தெரியும்
அதுவரை கருத்தாடல் நிலையில் தான் அரசியல் சீர்திருத்தம் நடந்துகொண்டிருக்கின்றது எனவே கருத்தாடலை வைத்துக் கொண்டு அரசியல் யாப்பை பிழை என தெரிவிக்க முடியாது எனவே இறுதிவடிவம் வரவேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்லாத ஒரு தீர்வு வருமாயின் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக இருக்காது. ஆனால் 70 வருடங்களாக இந்த முயற்சி நடந்து கொண்டு வருகின்றது
மகிந்த யுத்தத்தை வென்றபடியால் அவர் சொல்வதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்வார் என்ற அபிப்பிராயம் பொதுவாக இருக்கின்றது. ஆனால் அவர் இதை செய்வாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை
எங்களை பொறுத்தமட்டில் எல்லா ஆயுதங்களையும் கையளித்து விட்டோம் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை . இருந்தபோதும் மீண்டும் ஒரு ஆயத போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சித்தால் அது இன்னும் அழிவைத்தான் கொண்டு செல்லும் எனவே அப்படியான எண்ணப்பாடு எங்களுக்கும் எமது தோழர்கள் மத்தியிலும் இல்லை என்றார் .
Post Top Ad
Monday, December 10, 2018
தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன்
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.