Breaking

Post Top Ad

Sunday, December 9, 2018

விவசாயத் திணைக்களத்தின் மண்டபத்தடி பிரிவினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள பருத்திச்​சேனை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக பிரதேச விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை 08.12.2018 நடைபெற்றது.


மட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் மண்டபத்தடி விவசாய ​போதனாசிரியர் ஏ.தினேஸ்காந் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி  உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் மற்றும் விவசாய போதனாசிரியர்கள்  அதிதிகளாக கலந்துகொண்டனர்.


மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜாவின் திட்டமிடலில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பழமரச் செய்கை மேற்​கொள்ளும் விவசாயிகள் பலர் கலந்து​​​கொண்டனர்.

இதன்​​போது மாங்கன்றுகள் நடுவது முதல் அத​னை ​​​தொடர்ச்சியாக பராமரிப்பது வரை விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதில் குறிப்பாக  சிறந்த முறையில் மாமரங்களின் கிளைகளை  கத்தரித்தல் மற்றும் பங்கஸ் நாசினி விசிறுதல் போன்ற செய்முறை பயிற்சி பிரதேச மாமரச் செய்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இப் பிரதேச விவசாயிகள் விவசாயத் திணைக்களத்துடன்  தொடர்பாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எமது விவசாய போதனாசிரியர்களின் ஆலோசனைகள், உதவிகள் தாராளமாகக் கிடைக்கும் இதன்மூலம் விவசாய செய்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியும்.

அ​தே​போன்று எம்மால் வழங்கப்படும் இவ்வாறான பயிற்சிகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்வார்களானால் தமது பயிர்களில் எற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்று  சிறந்த விளைச்சலையும் வருமானத்தையும் அடைய முடியும். என பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்
























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages